WHO: திறம்பட கையாளாவிட்டால் உயிரிழப்புகள் 2 மில்லியனை எட்டக்கூடும்

2 mins read
4b6c5bbe-e0f5-4ef1-b897-a7a50652205e
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த திறம்பட செயல்படவில்லையெனில், தடுப்பு மருந்து பரவலாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக 2 மில்லியன் உயிரிழப்புகள்கூட நிகழக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த திறம்பட செயல்படவில்லையெனில், தடுப்பு மருந்து பரவலாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக 2 மில்லியன் உயிரிழப்புகள்கூட நிகழக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 9 மாதங்களில், அனைத்துலக அளவில் கொரோனா தொற்றுக்கு சுமார் 1 மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

3.2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். குளிர்காலம் தொடங்குவதால் வடதுருவ நாடுகள்பலவற்றில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளது.

ஐரோப்பிப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரையன் தெரிவித்தார்.

உலக நாடுகளிடையே கொரோனா தடுப்பு மருந்தைப் பகிர்ந்து விநியோகிப்பதன் தொடர்பிலான கோவேக்ஸ் நிதித் திட்டத்துக்கு பங்களிக்குமாறு சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக இல்லாதபோதும் தைவானும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளதையடுத்து, அந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 159 ஆகியுள்ளது. இன்னும் 34 நாடுகள் முடிவுகளைத் தெரிவிக்கவில்லை.

அந்தத் திட்டத்துக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதன் தொடர்பிலும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை அடிப்படையில் வழங்க சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்திருப்பதாக் சீனாவின் சுகாதரத்துறை அதிகாரி நேற்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்