நச்சு வாயு கசிவு; நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய குறைந்தது 16 பேர் பலி

நச்சு வாயு கசிவு; நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய குறைந்தது 16 பேர் பலி

1 mins read
bea12908-83c9-4935-a02c-58acbdb3694a
-

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியோரில் 16 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்திருக்கிறது.

அதிகாலை நேரத்தில் சுரங்கத்திலுள்ள தூக்கிப்பட்டை தீப்பிடித்ததாகவும் இதனால் ஆபத்தான அளவில் கரியமில வாயு உற்பத்தியானதாக கூறப்படுகிறது. விபத்தின் காரணம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக சீசியாங் வட்டார அரசாங்கம் தெரிவித்தது.

சீனாவில் நிலக்கரி துறையில் விதிமுறைகள் முறையாக அமல் படுத்தப்படாததால் அங்குள்ள நிலக்கரிச்சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் சாதாரணமானவை.