மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்: உலக வங்கி

கொவிட்-19 கொடுமை காரணமாக இவ்வாண்டு முதல் முறையாக இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிழக்கு ஆசியா, பசிபிக் வட்டாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் புதிய ஏழை மக்கள் உருவாகுவார்கள் என்றும் உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

இவ்வட்டாரங்களில் ஒட்டு மொத்த பொருளியல் வளர்ச்சி 0.9 விழுக்காடு மட்டுமே இருக்கும்.

இருந்தாலும் அண்டை நாடுகள் தவிர்த்து சீனாவின் நிலைமை சற்று மேலோங்கியிருக்கும் என்று வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலகக் கடன் வழங்கும் நிறுவனமான உலக வங்கி, அண்மைய பொருளியல் அறிக்கையில் தெரிவித்தது.

இவ்வாண்டு சீனாவின் பொருளியல் இரண்டு விழுக்காடு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அரசாங்கத்தின் வலுவான செலவிடும் ஆற்றல், வலுவான ஏற்றுமதி, மார்ச் மாதத்திலிருந்து இறங்குமுகமாக உள்ள கொவிட்-19 தொற்று ஆகியவை அந்நாட்டின் பொருளியலை தூக்கி நிறுத்துவதற்கான காரணங்களாகும்.

கொள்ளை நோய்ப் பரவல், கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளியல் மந்தநிலை ஆகிய மூன்று பெரும் தாக்குதல்களால் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஏழை மக்கள் மீதான தாக்கத்தை குறைக்கவும் பொருளியல் மேலும் மோசமடைவதைத் தடுக்கவும் சீர்திருத்தங்கள் தேவை என்று உலக வங்கி வலியுறுத்தியது.

செய்தியாளர்களிடம் பேசிய ஆசியா மற்றும் பசிபிக் வட்டாரத்துக்கான உலக வங்கியின் பொருளியல் நிபுணர் ஆதித்யா மட்டு, கிருமிப் பரவலை அரசாங்கங்கள் எப்படிச் சமாளிக்கும் என்பதைப் பொறுத்தே பொருளியல் மேம்படும் என்றார்.

“அர்த்தமுள்ள சீர்திருத்த நட வடிக்கைகள் இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். இதனால் வறுமையில் உள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படு வார்கள்,” என்று அவர் கூறினார்.

இதனால் இவ்வட்டாரங்களில் மேலும் 38 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரிசோதனைகளை அதிகரிப்பது, தொடர்புத் தடங்களைக் கண்டறிந்து தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவது, பாதுகாப்பான நடைமுறைகளுடன் பள்ளிகளைத் திறப்பது, ஆற்றல் வாய்ந்த தடுப்பூசிகளை நியாயமான முறையில் விநியோகிப்பது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளால் கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் உலக வங்கி பரிந்துரைகளை செய்துள்ளது.

ஆய்வில் கம்போடியா, சீனா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், பாப்புவா நியூகினி, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, திமோர் லெஸ்ட்லி, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளின் பொருளியல் நிலவரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

“பல நாடுகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன. பல அரசாங்கங்கள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இத்தகைய நாடுகள் தொடர்ந்து போராடி பொருளியலை மீட்டெடுக்கும்,” என்று டாக்டர் மட்டு தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!