கொவிட்19: ஏழை நாடுகளுக்கு $5 விலையில் 120 மில்லியன் பரிசோதனைக் கருவிகள்

கொரோனா கிரு­மித்­தொற்று இருக்­கி­றதா என்­பதை விரைந்து சோதிக்க உத­வும் பரி­சோ­த­னைக் கருவிகள் அதி­க­பட்­சம் 5 அமெ­ரிக்க டாலர் (S$6.87) விலை­யில் கிடைக்­கும்­படி செய்­யப்­படும் என உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

குறைந்த மற்­றும் நடுத்­தர வரு­மா­ன­முள்ள 133 நாடு­களில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்தி, பணக்­கார நாடு­க­ளு­ட­னான இடை­வெ­ளி­யைக் குறைக்க இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அது நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

120 மில்­லி­யன் கொவிட்-19 பரி­சோ­தனை சாத­னங்­களை அடுத்த 6 மாதங்­க­ளுக்­குள் தயா­ரிக்க, ‘அப்­பாட்’, ‘எஸ்டி பயோ­சென்­சார்’ நிறு­வ­னங்­கள் ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ்’ அற­நி­று­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­தி­ருக்­கி­ருக்­கின்­றன. அவை எளி­தில் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டி­யவை என்­றும் எளி­தில் வேறு இடங்­க­ளுக்­குக் கொண்டு செல்ல ஏது­வா­னவை என்­றும் உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் அதா­னோம் கேப்­ரி­யோ­சுஸ் குறிப்­பிட்­டார்.

தற்­போது அந்­தச் சாத­னங்­க­ளின் விலை $5 என நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் இன்­னும் மலி­வா­கக் கிடைக்க வாய்ப்­புண்டு என்­றும் அவர் கூறி­னார்.

போதிய மருத்­துவ வச­தி­கள் இல்­லாத, போதிய பயிற்சி பெற்ற சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­கள் இல்­லாத இடங்­களில் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்ளவும் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் இவை உத­வும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

முதல் கட்­ட­மாக, எயிட்ஸ், காச­நோய், மலே­ரியா போன்­ற­வற்­றுக்கு எதி­ரா­கப் போரிட உத­வும் அனைத்­து­லக நிதி­யம் இந்த பரி­சோ­தனை சாத­னங்­களை வாங்­கு­வ­தற்­காக $50 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் தொகையை இந்த வாரம் செலுத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!