மலேசியாவில் புதிய உச்சமாக இன்று 287 பேருக்கு கொவிட்-19

மலேசியாவில் புதிய உச்சமாக இன்று 287 பேருக்கு கொவிட்-19

1 mins read
ac402159-7fe9-4904-8156-5d2f87d0e445
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் இன்று (அக்டோபர் 2) 287 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கொவிட்-19 பரவலை மலேசியா கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான தினசரி தொற்று எண்ணிக்கையில் இது ஆக அதிகம்.

நேற்று அங்கு 260 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. சாபாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாபாவின் 27 மாவட்டங்களுக்கிடையே 14 நாட்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3 ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை அந்தத் தடை இருக்கும்.

மலேசியாவில் பதிவான மொத்த தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 11,771; இதுவரை 136 பேர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்