டிரம்ப் - மெலானியா தம்பதிக்கு கொவிட்-19; தனிமைப்படுத்திக்கொண்டு பணியைத் தொடரும் அதிபர்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் நலமாக இருப்பதாகவும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது.

திரு டிரம்ப், 74, சிகிச்சை பெற்றுவரும் அதே வேளையில் அலுவலகப் பணிகளை இடையூறின்றி மேற்கொள்வார் எனவும் அதிபரின் மருத்துவர் சியன் கோன்லே குறிப்பிட்டார்.

திரு டிரம்பின் வயதும் அதிக உடல் பருமனும் அவருக்கு ஏற்பட்டுள்ள தொற்றின் தீவிரம் குறித்த அக்கறையை ஏற்படுத்தியுள்ளன. திருமதி மெலானியா அவரைவிட 24 வயது சிறியவர்.

சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 1 மணியளவில் கொரோனா தொற்றிய செய்தியை தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் முன்னாள் தொடர்பு இயக்குநர் திருவாட்டி ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திரு டிரம்பும் அவரது மனைவியும் பரிசோதனை செய்துகொண்டனர்.

மின்னசோட்டாவுக்கு அதிபர் டிரம்புடன் கடந்த புதன்கிழமை சென்று வந்த திருவாட்டி ஹிக்ஸ் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு திரு ஜோ பைடனுடனான இரண்டாம், மூன்றாம் விவாதங்கள் இம்மாதம் 15, 22 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!