போராட்டங்களைத் தடுக்க ‘பேருந்துச் சுவர்’

மக்கள் இன்னும் ஒரு போராட்டத்தில் இறங்கி, அதன்மூலம் இன்னொருமுறை கொரோனா பரவிவிடாமல் தடுப்பதற்காக தென்கொரிய போலிசார் புதுமையான உத்தியைக் கையில் எடுத்துள்ளனர்.

தலைநகர் சோலில் அரசியல் பேரணிகள் இடம்பெறாமல் தடுக்க, நூற்றுக்கணக்கான பேருந்துகளைத் திரட்டி ‘பேருந்துச் சுவர்களை’ போலிசார் அமைத்துள்ளனர். அண்மைய வாரங்களாக தென்கொரியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று தேசிய தோற்றுவிப்பு நாளையொட்டி திட்டமிடப்படு இருந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துவிட்டது. அத்துடன், தடையை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோல் நகரின் முக்கிய சாலைகளிலும் மத்திய சதுக்கத்தைச் சுற்றிலும் பேருந்து அரண் போடப்பட்டுள்ளது. அத்துடன், போராட்டக்காரர்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தடுப்பதற்காக 90 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!