சீனாவின் கிராமப்பகுதி ஒன்றில் வசிக்கும் ஒரு பெண், தனது முன்னாள் கணவரால் தீயில் இட்டு வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லமாவ் என்ற அந்த 30 வயது பெண்ணின் உயிரைக் காப்பதற்கான முயற்சிகள் தோல்வியுற்று அவர் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 30ஆம் தேதி) உயிர் இழந்ததாக சீச்சுவான் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக ஊடகப் பிரபலமாக இருக்கும் அவரை டிக்டாக்கின் சீன வடிவமான டோயின் தளத்தில் 885,000 பேருக்கு மேல் பின்தொடர்ந்தனர். லமாவின் பாட்டுத் திறனும் ஆடை அலங்காரமும் பார்வையாளரை ஈர்த்திருந்ததுஅவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
டேங் என்ற அந்த ஆடவர் செப்டம்பர் 14ஆம் தேதியன்று மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றிக் கொழுளுத்தியதாகச் சீன ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட அவர், நோக்கத்துடன் பிறரைக் கொல்ல முற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

