‘2021 இறுதிக்குள் 160 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி’

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக 160 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தோனீசிய மக்கள்தொகையில் இந்த எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாகும்.
வேலைக்குச் செல்பவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தும். அதாவது, நாட்டின் 268 மில்லியன் மக்கள்தொகையில் 70 விழுக்காடு அங்கம் வகிக்கும் 19க்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக, சுகாதார ஊழியர்கள், போலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளியல் விவகார ஒருங்கிணைப்பு அமைச்சர் அர்லங்கா ஹர்தார்த்தோ தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4,000 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்படுகிறது. சீனாவின் ‘சினோவெக் பயோடெக்’ நிறுவனம் உருவாக்கியுள்ள நோய்த் தடுப்பு மருந்தை மக்களிடம் செலுத்திப் பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகளை இந்தோனீசியா நடத்தி வருகிறது. தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் அதை மக்களுக்கு விநியோகிக்க குறிப்பிடத்தக்க முயற்சி தேவைப்படும். அதில் 2,900க்கும் அதிகமான பொது, தனியார் மருத்துவமனைகளும் 10,000க்கும் மேலான சமூகச் சுகாதார மருந்தகங்களும் ஈடுபடுத்தப்படும் என்று திரு ஹர்தார்த்தோ தெரிவித்தார்.

தனது இலக்கை எட்ட இந்தோனீசியாவுக்கு 370 மில்லியன் வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அதன் முதற்கட்டமாக இவ்வாண்டு இறுதிக்குள் 36 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!