2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 59 ‘மம்மிகள்’ கண்டெடுப்பு; அனைத்தும் பெண்களுடையவை

நன்கு பாதுகாக்கப்பட்ட, மூடப்பட்டு புதைக்கப்பட்ட 59 மர சவப்பெட்டிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கடந்த சில வாரங்களில் கண்டு பிடித்துள்ளனர்.

அவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அவற்றுள் நன்கு அலங்கரிக்கப்பட்ட சவப் பெட்டி ஒன்றைத் திறந்து, துணியால் சுற்றப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ‘மம்மி’ ஒன்று நேற்று ஊடகவியலாளர்களுக்குக் காட்டப்பட்டது.

எகிப்து தலைநகர் மெம்பிசில் உள்ளா யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமான சக்காரா எனும் இடத்திலிருந்து இந்த மம்மிகள் மீட்கப்பட்டுள்ளன.

முதலில் 13 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக 3 வாரங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. 12 மீட்டர் ஆழம் வரையில் தோண்டியதில் எஞ்சிய சவப்பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இன்னும் அதிக எண்ணிக்கையிலான ‘மம்மி’கள் கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சுற்றுப் பயணம், பழங்காலப் பொருட்கள் அமைச்சர் திரு காலிட் அல்-அனானி குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!