மூன்றாவது நாளாக குடிக்க தண்ணீர் இல்லை; மக்கள் கோபம்

மூன்றாவது நாளாக குடிக்க தண்ணீர் இல்லை; மக்கள் கோபம்

1 mins read
df0660cd-e80d-4bc1-b7a5-64510464af60
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் மூன்­றா­வது நாளாக தண்­ணீர் விநி­யோ­கத் தடை­யால் ஆவே­சம் அடைந்­துள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள், இது­போன்ற பிரச்­சி­னை­கள் மீண்­டும் ஏற்­ப­டா­ம­லி­ருக்க அதி­கா­ரி­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

இந்த விவ­கா­ரம் குறித்து பல­ரும் சமூக ஊட­கங்­களில் விரக்­தியை வெளிப்­ப­டுத்­தி­னர். தண்­ணீர் மாசு­பாட்­டிற்கு கார­ண­மா­னோ­ருக்கு சட்­டப்­படி கடு­மை­யான தண்­டனை விதிக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளி­டம் மக்­கள் கோரி வரு­கின்­ற­னர்.

ஆறு­களில் ஏற்­பட்­டுள்ள தண்­ணீர் மாசு­பாடு கார­ண­மாக இரு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பெட்­டா­லிங், ஹுலு லங்­காட், கோலா, லங்­காட், செப்­பாங் மாவட்­டங்­களில் 309,687 பய­னா­ளர்­க­ளுக்கு தண்­ணீர் விநி­யோகம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தடைப்­பட்­டது.