தனிமையில் மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா

தனிமையில் மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா

2 mins read
a12415ad-8897-454b-acd5-ab25d785a82f
-

கோலா­லம்­பூர்: மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா (படம்) நேற்று முதல் தம்மை தனி­மைப்­படுத்­திக்­கொண்­டார். கொவிட்-19 தொற்றி­ய­வ­ரு­டன் அவர் தொடர்­பில் இருந்­த­தைத் தொடர்ந்து தம்மை தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டார்.அன்­றாட கொவிட்-19 தொடர்­பான செய்­தி­யா­ளர் சந்­திப்­பு­களை அவர் வீட்­டி­லி­ருந்­த­வாறு நடத்­து­கிறார். கடந்த சனிக்­கி­ழமை புத்ரா­ஜெ­யா­வில் மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின் தலைமை தாங்­கிய தேசிய பாது­காப்பு மன்ற சிறப்­புக் கூட்­டத்­தில் டாக்­டர் நூர் ஹிஷாம் பங்­கேற்று இருந்­தார்.

சமய விவ­கார அமைச்­சர் ஸுல்­கி­ஃப்லி முகம்­மது அல் பக்ரி உட்­பட அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள் பல­ரும் அந்­தக் கூட்­டத்­தில் கலந்து­கொண்­ட­னர். டாக்­டர் ஸுல்­கி­ஃப்­லிக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக பின்­னர் அறி­விக்­கப்­பட்­டது. அந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­களும் அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களும் 14 நாட்­கள் தங்­களை வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு உள்­ள­தாக டாக்­டர் நூர் ஹிஷாம் நேற்று முன்­தி­னம் கூறி­னார்.

தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு உள்­ள­வர்­களில் பிர­த­மர் முகை­தீனும் அடங்­கு­வார். அந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்ற அனை­வ­ருக்கும் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மன்­னிப்பு கோரி­னார் அமைச்­சர்

இதற்­கி­டையே, தம்மை கிருமி தொற்­றி­ய­தற்கு தமது நடை­மு­றை­யில் குறை­பாடு எது­வும் கார­ண­மாக இருந்­தி­ருந்­தால் அதற்­காக டாக்­டர் ஸுல்­கி­ஃப்லி மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

"எனது செயல்­பா­டு­க­ளைப் பற்றி சிந்­தித்­துப் பார்ப்­ப­தற்­கும் என்னை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கும் இந்­தத் தரு­ணம் வாய்ப்­ப­ளிக்­கிறது," என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவர் நேற்று பதி­விட்­டார்.

கடந்த மாதம் 24ஆம் தேதிக்­கும் இம்­மா­தம் 4ஆம் தேதிக்­கும் இடை­யில் தாம் பங்­கேற்ற நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொண்­ட­வர்­கள் உட­ன­டி­யாக கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மாறு டாக்­டர் ஸுல்­கி­ஃப்லி அறி­வு­றுத்­தி­னார். மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரும் வேளை­யில் டாக்­டர் ஸுல்­கி­ஃப்­லிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.