புதிய 5ஜி திறன்பேசிகளை ஆப்பிள் இணைய விழாவில் அறிமுகம் செய்யும்

புதிய 5ஜி திறன்பேசிகளை ஆப்பிள் இணைய விழாவில் அறிமுகம் செய்யும்

1 mins read
ad851a85-0b66-482f-8cfb-8ca8f817089b
-

ஆப்பிள் நிறுவனம் இம்மாதம் 13ஆம் தேதி நான்கு புதிய திறன்பேசி வடிவங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

5ஜி இணைப்பு, மேம்பட்ட கேமராக்கள், விரைவாக செயல்படும் செயலிகள், மேலும் பெரிய திரைகள் உள்ளிட்ட அம்சங்களை இந்தத் திறன்பேசி வடிவங்கள் கொண்டிருக்கும் என்று அந்நிறுவனம் திட்டமிடுவதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதற்கான வெளியீட்டு நிகழ்ச்சி இணையத்தில் நடத்தப்படும் என்றது ஆப்பிள் நிறுவனம். கொவிட்-19 கிருமிப்பரவல் காரணமாக இந்தத் திறன்பேசிகளுக்கான சோதனைகள் கிட்டத்தட்ட ஒரு மாதம் தாமதமடைந்தன.