சிரம்பான்: சிலாங்கூரின் சில பகுதிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் விநியோகம் தடைபடுவதற்குக் காரணமான இரு சந்தேக நபர்களை கிளந்தானில் போலிசார் கைது செய்தனர்.
சிலாங்கூரின் நெகிரி செம்பிலான் நகரத்தின் நீலாய் ஆற்றுக்கு அருகில் குப்பையைக் கொட்டியதால் சுமார் 310,000 வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
இன்று முதல் படிப்படியாக, சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் தண்ணீர் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
குப்பையைக் கொட்டிய சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 18 சக்கர வாகனம் ஒன்றையும் போலிசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தின் ஓட்டுநர், பராமரிப்பாளர் என இருவர் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில துணை போலிஸ் தலைவர் சி ஸக்காரியா ஒத்மான் தெரிவித்தார்.
திட மற்றும் திரவக் கழிவுகள் ஆற்றுக்கு அருகில் கொட்டப்பட்டதை அடுத்து, சிலாங்கூரின் சுங்கை செமெனியி, புக்கிட் டம்போய் தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையங்களின் செயல்பாடு தடைபட்டதாகக் கூறப்பட்டது.

