பொதுமக்கள் ஒன்றுகூட இலங்கை தடை; கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று

1 mins read
534f922d-1f76-4bf9-8fff-f3c05112a24e
கொழும்பு நகராட்சி மன்றத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படம்: இபிஏ -

புதிய கொவிட்-19 கிருமித் தொற்று குழுமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்கள் ஒன்றுகூடுவதை இலங்கை அரசு அடியோடு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் 830 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் எழுந்தது. மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

பொதுமக்கள் ஒன்று கூடும் கண்காட்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகள், மாநாட்டுக் கூட்டங்கள், உள்ளரங்க மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை அரங்கங்கள் மற்றும் ஊர்வலங் கள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்படுவதாகவும் அந்தத் தடை உத்தரவு உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இலங்கையில் இதுவரை 3,733 பேரை கிருமி தொற்றி யது. 13 பேர் மாண்ட நிலையில் 3,266 பேர் குணமடைந்தனர்.