மாமன்னரைச் சந்திக்க அன்வாருக்கு அனுமதி

மாமன்னரைச் சந்திக்க அன்வாருக்கு அனுமதி

1 mins read
0f4177bf-9f80-46c7-a352-9dba93d5ad3f
படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசிய மாமன்னரை வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) சந்தித்து உரையாட அனுமதி கிடைத்திருப்பதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் பதவியை அவர் ஏற்பதன் தொடர்பிலும் அதற்காக அவருக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவு குறித்தும் அவர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் உரையாட இருப்பதாக திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

"மலேசியர்கள் அமைதிகாத்து, பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்; மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மதித்து செயல்படுங்கள்," என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்