தனிமைப்படுத்திக்கொண்ட சாபா முதல்வர்

தனிமைப்படுத்திக்கொண்ட சாபா முதல்வர்

1 mins read
8fdc628c-c94b-458d-9bff-588f372ae772
படம்: ஊடகம் -

மலேசியாவில் சாபாவின் முதல்வர் ஹஜிஜி நூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தம்முடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

"மாநில அரசாங்கம் வழக்கம் போல செயல்படும். தேவை ஏற்பட்டால் கூட்டங்கள் இணையம் வழி நடத்தப்படும்," என சாபா மாநிலச் செயலாளார் சாஃபர் உன்டோங் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சாபாவில் நேற்றைய நிலவரப்படி 3,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,700 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

குறிப்புச் சொற்கள்