இரண்டாவது தடுப்பு மருந்தை பதிவு செய்ய ரஷ்யா தீவிரம்

இரண்டாவது தடுப்பு மருந்தை பதிவு செய்ய ரஷ்யா தீவிரம்

1 mins read
4bdf2191-7785-4eab-87c3-d61af23cf0eb
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 கொள்ளை நோய்க்கு எதி­ரான இரண்­டா­வது தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் 15ஆம் தேதி பதிவு செய்ய இருப்­ப­தாக அந்த மருந்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

சிபெ­ரி­யா­வின் வெக்­டர் ஆய்­வுக் கழ­கத்­தில் தடுப்பு மருந்து தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

மனி­தர்­க­ளி­டம் அந்த மருந்­தைப் பயன்­ப­டுத்தி பரி­சோ­திக்­கும் முதற்­கட்ட நட­வ­டிக்கை கடந்த மாதம் நிறை­வுற்­ற­தாக அவர்­கள் கூறி­னர்.

இரண்­டா­வது கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க இரவு விடு­தி­க­ளை­யும் மது­பா­னக் கூடங்­க­ளை­யும் மூட மாஸ்கோ தயா­ராகி வரும் நிலை­யில் அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

மேலும் நேற்று ரஷ்­யா­வில் ஆக அதி­க­மான கிருமித் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­யின.