சட்டவிரோத விற்பனையில் மதிப்புமிக்க புத்தர் சிலை: போலிசார் பறிமுதல்

சட்டவிரோத விற்பனையில் மதிப்புமிக்க புத்தர் சிலை: போலிசார் பறிமுதல்

1 mins read
fcd92a58-a801-4bac-8f14-853d1d7a8d53
படம்: ஊடகம் -

இலங்கையில் மதிப்புமிக்க புத்தர் சிலை ஒன்றை போலிசார் கைப்பற்றி உள்ளனர்.

நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை இரண்டு அங்குல உயரம் உள்ளது என்று போலிசார் கூறினர்.

இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் சுமார் 600 கோடி என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இலங்கையின் ஊவா மாகாணத்தில் உள்ள மொராகலை மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலை கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோதமாக விற்பனை செய்ய சிலையை ஒரு கும்பல் தயாரித்ததாகவும் அந்த சட்ட விரோத விற்பனை தடுக்கப்பட்டதாகவும் போலி சார் கூறினர்.

விற்பதற்காக சிலையைக் கொண்டு சென்றபோது அது பற்றி தங்களுக்குத் தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.