'மறுசீரமைப்புத் திட்டம் நிறைவேறாவிடில் மலேசிய ஏர்லைன்ஸ் மூடப்படலாம்'

'மறுசீரமைப்புத் திட்டம் நிறைவேறாவிடில் மலேசிய ஏர்லைன்ஸ் மூடப்படலாம்'

1 mins read
aae06fe6-c6ce-4b5c-87f3-290410db58f2
படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் ஆக அண்மைய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு குத்தகைதாரர்கள் ஆதரவு வழங்காவிட்டால் அதை மூட வேண்டிவரும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இஸாம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஏர்லைன்சின் மறுசீரமைப்புத் திட்டத்தை சில குத்தகைதாரர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக அவர் கூறினார். கடன் தந்தவர்களில் சிலர் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சிலர் திட்டத்தை மறுத்துவிட்டதாக அவர் கூறினார். சிலர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.