டிரம்ப்பினால் கிருமித்தொற்று ஆபத்து இல்லை: மருத்துவர்

வாஷிங்­டன்: அதி­பர் டிரம்ப் மூலம் இனி­யும் மற்­ற­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­படும் ஆபத்து இல்லை என்று வெள்ளை மாளி­கை­யின் அதி­கா­ர­பூர்வ மருத்­து­வர் கூறி­யுள்­ளார்.

சென்ற வியா­ழக்­கி­ழ­மைக்­குப் பிறகு முதல் முறை­யாக நேற்று முன்­தி­னம் அதி­பர் டிரம்ப்­பின் உடல்­நிலை பற்­றிய குறிப்பு ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அதில், அதி­ப­ரி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட அண்­மைய சோத­னை­களில் அவ­ருக்கு கிருமி இருப்­ப­தற்­கான அறி­குறி இல்லை என்­பது தெரிய வந்­துள்­ள­தாக மருத்­து­வர் ஷோன் கான்லே தெரி­வித்­திருந்தார். ஆனால் அவர் முழு­மை­யாக குண­ம­டைந்­து­விட்­டாரா என்­பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள திரு டிரம்ப்­புக்கு ராணுவ மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. மூன்று நாள் சிகிச்­சைக்­குப் பிறகு சனிக்­கி­ழமை அன்று வெள்ளை மாளி­கைக்கு வரு­கை­ய­ளித்த அவர் பலத்த கைதட்­ட­லுக்கு இடையே தனது ஆத­ர­வா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

அதிபர் டிரம்ப் மூலம் மற்­ற­வர்­களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவும் வேளையில் மருத்துவரின் அறிவிப்பு வெளியாகி யுள்ளது. அதி­ப­ரின் உட­லில் எந்த அள­வுக்கு கிரு­மித் தொற்­றுப் பாதிப்பு இருக்­கிறது என்­பதை அறிய நுட்பமான ­சோதனை நடத்தப்பட்டது ­என்று கூறிய திரு ஷோன் கான்லே, அவரிடம் இ­ருந்து மற்­ற­வர்­க­ளுக்கு தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இல்லை என்­றார்.

பத்து நாட்­க­ளுக்கு முன்பு டிரம்ப்­பி­டம் கொவிட்-19 பாதிப்­பு தென் பட்டதால் மறு­நாள் அக்­டோ­பர் 2ஆம் தேதி அவர் வால்­டர் ரிட் மருத்­துவ நிலை­யத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டு உடல்­நிலை மோச­மா­ன­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் ‘டெக்­ஸோ­மித்­த­சோன்’ உட்­பட பல்­வேறு மருந்து­கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டு வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!