'முகைதீனுக்கு முழு ஆதரவு'

1 mins read
d677a21b-8e18-413b-b1f5-b4bfad79bd5b
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீ­னுக்கு பெர்­சாத்து, பாஸ் கட்­சி­கள் தங்­க­ளு­டைய ஆத­ரவை மறு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

புதிய அர­சாங்­கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கெஅ­டி­லான் கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் நாளை மாமன்­னரை சந்­திக்­க­வி­ருக்­கி­றார். ஆட்சி அமைக்க தேவையான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­வருகிறார்.

இந்த நிலை­யில் பெர்­சத்­துக் கட்­சி­யும் பாஸ் கட்­சி­யும் திரு முகை­தீ­னுக்கு ஆத­ர­வாக இருப்­போம் என்று உறுதி தெரி­வித்­துள்­ளன. "பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக அன்­வார் கூறு­வதற்கு ஆதா­ரம் இல்லை," என்று பெர்­சத்­துக் கட்­சி­யின் தலைமைச்செய­லா­ளர் ஹம்ஸா சைனூ­டின் கூறினார்.

பெர்­சத்­துக் கட்­சி­யின் 31 நாடாளுமன்ற உறுப்­பி­னர்­களும் பிர­த­மர் முகை­தீ­னையே ஆத­ரிப் பதாகவும் அவர் சொன்னார். பாஸ் கட்­சி­யும் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தனது 18 உறுப்­பி­னர்­களும் தேசிய கூட்­டணி அர­சாங்­கத்­துக்கு தலைமை வகிக்­கும் பிர­த­மர் முகை­தீ­னுக்கு முழு­ ஆதரவு வழங்குவதாக தெரி­வித்­தது.

திரு அன்வார் தலைமையில் நாடாளுமன்றத்தில் 91 உறுப்பினர்களைக் கொண்ட பக்கக்தான் ஹரப்பான் கூட்டணி செயல்படுகிறது. அரசாங்கத்தை அமைக்க குறைந்தது 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் ஆளும் கட்சியிலிருந்து சிலர் விலகி தனக்கு ஆதரவு அளிக்கலாம் என அன்வார் எதிர்பார்க்கிறார்.