கொவிட்-19 கிருமி 28 நாள்களுக்கு நோய் பரப்பும் திறனைக் கொண்டிருக்கும்: புதிய ஆய்வு

கொவிட்-19 தொற்­றைப் பரப்­பும் கிருமி, பணத்­தாள், கண்­ணாடி, எஃகு போன்ற மேற்­ப­ரப்­பு­களில் இருக்­கும்­போது நான்கு வார காலத்திற்கு நோயைப் பரப்­பும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் என்று ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தேசிய அறி­வி­யல் அமைப்­பின் இந்த ஆய்வு முடி­வு­கள், கொரோனா கிருமி இது­வரை எண்­ணி­யி­ருந்­த­தைக் காட்­டி­லும் அதிக காலத்­திற்­குத் தாக்­குப்­பி­டிக்­கும் எனக் கூறு­கின்­றன.

இருப்பினும், இந்த ஆய்வு இரு­ளில் மேற்­கொள்­ளப்­பட்­டது. புற ஊதாக் கதிர்­கள் படும்­போது கொரோனா கிருமி அழிந்­து­வி­டும் எனச் சொல்லப்படுகிறது.

இந்­நி­லை­யில், அன்­றாட வாழ்க்­கை­யில் மேற்­ப­ரப்­பு­கள் வழி­யாக கொரோனா பர­வும் அச்­சு­றுத்­தல் இருக்­கி­றதா என நிபு­ணர்­கள் சிலர் கேள்வி எழுப்பி இருக்­கின்­ற­னர்.

பெரும்பாலும் இருமுவதன், தும்முவதன் அல்லது பேசுவதன் மூலம் கொரோனா பரவுகிறது.

ஆனா­லும், காற்­றில் மிதக்­கும் நுண்­து­கள்­கள் மூலம் கிரு­மித் தொற்று பர­வ­லாம் என்­ப­தற்­கும் சான்­றுள்­ளது. கிருமி ஒட்­டி­யி­ருக்­கக்­கூ­டிய உலோ­கம் அல்­லது பிளாஸ்­டிக் போன்ற மேற்­ப­ரப்­பைத் தொடு­வ­த­னா­லும் அது பரவ வாய்ப்புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பணத்­தாள்­க­ளி­லும் கண்­ணா­டி­யி­லும் ஒட்­டி­யி­ருக்­கும் கொரோனா கிருமி இரண்டு, மூன்று நாள்­களுக்கு மட்­டுமே நோயைப் பரப்­பும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் என்­றும் பிளாஸ்­டிக், எஃகு பரப்­பு­களில் ஆறு நாள்­கள் வரை இருக்­கும் என்­றும் முந்­தைய ஆய்­வ­கச் சோத­னை­களில் கண்டறியப்பட்டது.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் காமன்­வெல்த் அறி­வி­யல், தொழில் ஆய்வு நிறு­வ­னம், சாதா­ரண வெப்­ப­நி­லை­யில் அல்­லது இரு­ளில், கைபே­சித் திரை போன்ற வழ­வ­ழப்­பான கண்­ணா­டிப் பரப்­பு­களி­லும் பிளாஸ்­டிக், காகி­தப் பணத்­தாள்­க­ளி­லும் ஒட்­டி­யுள்ள கொரோனா கிருமி வலு­வான நோயைப் பரப்­பும் திற­னு­டன் இருக்­கும் என்று தெரி­வித்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!