சிங்கப்பூரைப்போல இருந்தால் உயிரிழப்பைக் குறைக்க முடியும்: வாஷிங்டன் பல்கலைக்கழகம்

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 தொற்­றால் இது­வரை கிட்­டத்­தட்ட 215,000 பேர் மர­ண­ம் அ­டைந்­துள்ள நிலை­யில், 2021 ஜன­வரி 1ஆம் தேதி அந்த எண்­ணிக்கை 371,000ஆக அதி­க­ரிக்­க­லாம் என்று வாஷிங்­டன் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சுகா­தார நிலை­யம் கணித்­துள்­ளது.

அதே வேளை­யில், சிங்­கப்­பூரி­லும் வேறு சில நாடு­க­ளி­லும் இருப்­ப­தைப் போல, முகக்­க­வ­சப் பயன்­பாட்­டைக் கிட்­டத்­தட்ட 95 விழுக்­கா­டாக உயர்த்­தி­னால் இவ்­வாண்டு இறு­திக்­குள் 96,000 உயி­ரி­ழப்­பு­க­ளைத் தடுக்க முடி­ய­லாம் என்று சுகா­தார அள­வீட்டு, மதிப்­பீட்டு நிலை­யம் தெரி­வித்துள்ளது.

முகக்­க­வ­சப் பயன்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூ­ரைப் பற்றி அந்­த நி­லை­யம் குறிப்­பிட்­டி­ருப்­பது இது முதன்­முறை அல்ல.

சென்ற மாதத் தொடக்­கத்­தில், அமெ­ரிக்­கர்­கள் பல­ர் முகக்­க­வசம் இன்றி வெளியே செல்­லத் தொடங்­கி­ய­தும், “சிங்­கப்­பூரைப் போல முகக்­க­வ­சப் பயன்­பாட்டை அதி­கரித்­தால் மொத்த உயி­ரி­ழப்பை 288,000ஆகக் குறைக்க, அதா­வது மேலும் 122,000 உயிர்­க­ளைக் காப்­பாற்­ற­லாம்,” என்று அந்­நி­லை­யம் கூறி இருந்­தது.

இத­னி­டையே, நியூ­யார்க் நக­ரில் கடந்த வார இறு­தி­யில் முகக்­ க­வ­சம் அணி­யா­மல் பாது­காப்பு இடை­வெளி விதி­க­ளைக் கடைப்­பி­டிக்­காததால் மொத்­தம் 150,000 டாலர் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!