ஹேமில்டனுக்குத் தலைக்கவசம் பரிசளித்த ஷுமாக்கரின் மகன்

ஹேமில்டனுக்குத் தலைக்கவசம் பரிசளித்த ஷுமாக்கரின் மகன்

1 mins read
dc1df88c-b27a-4d04-9852-2bd57924e345
ஹேமில்­ட­னுக்கு வாழ்த்து தெரி­வித்த ஷுமாக்­க­ரின் மகன் மிக், தம் தந்தை இரண்­டாம் முறை­யாக மெர்­சி­டிஸ் குழு­வின் சார்­பில் எஃப்1 பந்­த­யங்­களில் பங்­கேற்­ற­போது அணிந்த சிவப்­புத் தலைக்­க­வ­சங்­களில் ஒன்றை அவ­ருக்­குப் பரி­சாக அளித்­தார். படம்: ஊடகம் -

ஜெர்­மா­னிய ஃபார்முலா ஒன் கார் பந்­த­யத்­தில் வென்­ற­தன் மூலம் 91 வெற்­றி­களை ஈட்டி, முன்­னாள் நட்­சத்­தி­ரம் மைக்­கல் ஷுமாக்­க­ரின் சாத­னை­யைச் சமன் செய்­தார் மெர்­சி­டிஸ் குழு­வின் லூவிஸ் ஹேமில்­டன்.

இதை­ய­டுத்து, ஹேமில்­ட­னுக்கு வாழ்த்து தெரி­வித்த ஷுமாக்­க­ரின் மகன் மிக், தம் தந்தை இரண்­டாம் முறை­யாக மெர்­சி­டிஸ் குழு­வின் சார்­பில் எஃப்1 பந்­த­யங்­களில் பங்­கேற்­ற­போது அணிந்த சிவப்­புத் தலைக்­க­வ­சங்­களில் ஒன்றை அவ­ருக்­குப் பரி­சாக அளித்­தார். அதைப் பெற்­றுக்­கொண்ட ஹேமில்­டன், "மிக்க நன்றி. இது எனக்­குக் கிடைத்த பெரும் கௌர­வம்," என்­றார்.

நேற்று முன்­தி­னம் நடந்த ஜெர்­மா­னிய எஃப்1 பந்­த­யத்­தில் ரெட் புல் குழு­வின் மேக்ஸ் வெர்ஸ்­டாப்­பன் இரண்­டா­வ­தா­க­வும் ரெனால்ட் குழு­வின் டேனி­யல் ரிக்­கார்டோ மூன்­றா­வ­தா­க­வும் வந்­த­னர்.