மலேசியாவில் புதிய கட்டுப்பாடுகள்; வசதி குறைந்தவர்களுக்கு கூடுதல் உதவி

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய அர­சாங்­கம், கிரு­மித்­தொற்று கட்­டுக்­கடங்­கா­மல் பர­வும் இடங்­களில் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களை மேலும் இறுக்­கி­யி­ருக்­கிறது.

அண்­மைய வாரங்­க­ளாக கூட்டரசுப் பிரதேசங்களான கோலா­லம்­பூர், புத்­ரா­ஜெயா ஆகியவற்றுடன் சிலாங்­கூர் மாநி­லத்­திலும் அச்­ச­மூட்­டும் வகை­யில் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. இத­னால் நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்டுப்­பாட்டு உத்­த­ரவை அர­சாங்­கம் பிறப்­பித்­துள்­ளது.

இன்று அம­லுக்கு வந்துள்ள இந்த உத்­த­ரவு இம்­மா­தம் 27ஆம் தேதி வரை நீடிக்­க­வி­ருக்­கிறது. புதிய நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­களால் நாடு முழு­வ­தும் மூன்­றில் ஒரு பங்கு மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது.

“நக­ரங்­களில் வசிக்­கும் பெரும்­பா­லா­னோர் பாதிப்­புக்கு உள்­ளா­வார்­கள். குறிப்­பாக ஏழை மக்­கள் நிச்­ச­யம் பாதிக்­கப்­ப­டு­வார்­கள்,” என்று கூட்­ட­ர­சுப் பிர­தேச அமைச்­சர் அனு­வார் மூசா தெரி­வித்­தார்.

இந்த நிலை­யில் வச­தி­ கு­றைந்­த­வர்­க­ளுக்­கும் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்­கும் கூடு­த­லான சமூ­க­நல உத­வி­களை அறி­விக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

கடந்த மார்ச் மாதம் சிறிய நிறு­வ­னங்­கள், முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் மற்­றும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உதவ 63.6 மில்­லி­யன் ரிங்­கிட் (S$20.8 மி.) மதிப்­புள்ள உத­வித் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன. ஆனால் தற்­போது அம­லாக்­கப்­பட்­டுள்ள புதிய கட்­டுப்­பாடுகள் ஏழை மக்­க­ளைப் பெரி­தும் பாதிக்­கும் என்­ப­தால் கூடு­த­லான சமூக உத­வி­கள் வழங்­கு­வது குறித்து அரசு ஆராய்ந்து வரு­கிறது.

புதிய கட்­டுப்­பாட்டு உத்­த­ரவு அம­லாக்­கப்­ப­டு­வதை நேரில் சென்று தாம் மேற்­பார்­வை­யி­டப் போவ­தாக திரு அனு­வார் டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார். பல அர­சாங்க அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய மத்­திய அர­சின் பேரி­டர் நிர்­வாக அமைப்பு தனது தலை­மை­யில் செயல்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

“கொவிட்-19 பர­வலை முறி­ய­டிப்­போம், வீட்­டில் தங்­கி­யி­ருங்­கள், பாது­காப்­பாக இருங்­கள், ஒற்­று­மை­யாக இருங்­கள்,” என்று திரு அனு­வார் கேட்­டுக்­கொண்­டார்.

கோலா­லம்­பூர், சிலாங்­கூர் உட்­பட குறிப்­பிட்ட சில இடங்­களில் மட்­டுமே நிபந்­த­னை­யு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் அம­லாக்­கப்­பட்­டா­லும் நாடு முழு­வ­தும் அதன் பாதிப்பு எதி­ரொ­லித்­துள்­ளது. மலே­சியா முழு­வ­தும் ஹோட்­டல் அறை­களுக்­கான பதி­வு­கள் ரத்து செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

இதுகுறித்து பேசிய மலே­சிய ஹோட்­டல்­கள் சங்­கத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி யாப் யிப் செங், புதிய கட்­டுப்­பா­டு­க­ளால் ஹோட்­டல் அறை­க­ளுக்­கான பதிவு­க­ளை­யும் தாண்டி பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ இருக்­கிறது,” என்று குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!