சுற்றுப்பயணி ஒருவருக்காக 'மச்சு பிச்சு' கோட்டை திறப்பு

சுற்றுப்பயணி ஒருவருக்காக 'மச்சு பிச்சு' கோட்டை திறப்பு

1 mins read
fd111131-efbe-4e12-af88-fda3a3731dca
-

லிமா: தென்னமெரிக்க நாடான பெருவில் உள்ள புகழ்பெற்ற 'மச்சு பிச்சு' சுற்றுலாத் தலம், ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு சுற்றுப்பயணிக்காக திறக்கப்பட்டது. மச்சு பிச்சு கோட்டையைச் சுற்றிப்பார்க்க ஜப்பானில் இருந்து வந்த சுற்றுப்பயணி ஒருவரது பயணத் திட்டங்கள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறப்பு வேண்டுகோளை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பெரு கலாசாரத்துறை அமைச்சர் நெய்ரா தெரிவித்தார். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு அடுத்த மாதம் மச்சு பிச்சு கோட்டை திறந்துவிடப்படும் என்றார் அவர்.