டிரம்ப்பை எதிர்த்து 72 விழுக்காடு இந்தியர்கள் வாக்களிக்க இருப்பதாக ஆய்வில் தகவல்

1 mins read
a0226a5b-2285-44bd-958c-a571ae58316e
-

அமெ­ரிக்­கா­ வில் வசிக்­கும் இந்­தி­யர்­களில் முக்­கால் ­வா­சிப் பேர் அதி­பர் தேர்­த­லில் ஜன­நா­ய­கக் கட்சி வேட்­பா­ளர் ஜோ பைட­னுக்கு வாக்­க­ளிக்­கத் திட்­ட­மிட்டு இருப்­ப­தாக கருத்­தாய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

அதி­பர் டோனல்ட் டிரம்ப் தலை­மை­யில் அர­சாங்­கம் தவ­றான பாதை­யில் சென்­று­கொண்டு இருக்­கி­ற­தென இந்­தி­யர்­கள் கூறி­ய­தாக அந்த ஆய்வு குறிப்­பி­டு­கிறது. அனைத்­து­லக அமை­திக்­கான கார்­னகி அறக்­கட்­டளை, ஜான்ஸ் ஹாப்­கின்ஸ்-எஸ்­ஏ­ஐ­எஸ், பென்­சில்­வே­னியா பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­யன இணைந்து செப்­டம்­பர் 1 முதல் செப்­டம்­பர் 20 வரை அந்த ஆய்வை நடத்­தின.

அமெ­ரிக்­கா­வின் இரண்­டா­வது பெரிய குடி­யேற்­றக் குழு­வாக இந்­தி­யர்­கள் உள்­ள­னர். இருப்­பி­னும் நவம்­பர் 3ஆம் தேதி நடை­பெற இருக்­கும் அதி­பர் தேர்­த­லுக்­கான பதி­வு­செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்­களில் இந்­தி­யர்­கள் விகி­தம் 1 விழுக்­காட்­டுக்­கும் கீழ்­தான். அதே­நே­ரம் தங்­க­ளுக்கு ஆத­ரவு திரட்ட அமெ­ரிக்­கா­வின் இரு கட்­சி­களும் இந்­தி­யர்­களை நாடி உள்­ளன.

துணை அதி­பர் பத­விக்கு இந்­திய வம்­சா­வ­ளிப் பெண்­ணான செனட்­டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்த பின்­னர் இந்­தி­யர்­கள் மத்­தி­யில் ஜோ பைட­னுக்­கான ஆத­ரவு அதி­க­ரித்­து­விட்­ட­தாக குறிப்­பி­டும் ஆய்வு இந்­தி­யர்­களில் 72 விழுக்­காட்­டி­னர் திரு ஜோ பைட­னுக்­கும் 22 விழுக்­காட்­டி­னர் திரு டிரம்ப்­புக்­கும் வாக்­க­ளிக்க இருப்­ப­தாக தெரி­வித்­தது. அமெ­ரிக்­கா­வின் இந்­திய சமூ­கம் ஜன­நா­ய­கக் கட்­சிக்கு உறு­து­ணை­யாக இருப்­பது வழக்­கம் என்­ற­போ­தி­லும் இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் அதி­பர் டிரம்ப்­புக்­கும் இடை­யி­லான ஆழ­மான நட்­பின் கார­ண­மாக குடி­ய­ர­சுக் கட்சி மீதான அச்­ச­மூ­கத்­தின் எதிர்­பார்ப்­பு­கள் வளர்ந்­தி­ருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.