வளரும் நாடுகளின் தடுப்பூசிகளுக்கு உலக வங்கி $12பி. ஒதுக்கீடு

வளரும் நாடுகளின் தடுப்பூசிகளுக்கு உலக வங்கி $12பி. ஒதுக்கீடு

1 mins read
b47ba1b7-1f1e-42c8-a1d1-35383cef6838
படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: கொவிட்-19 தடுப்பூசிகளை வாங்கி விநியோகிக்கவும் சோதனை மற்றும் குடிமக்களின் சிகிச்சைக்கும் 12 பில்லியின் யுஎஸ் டாலர் நிதியை வளரும் நாடுகளுக்கு ஒதுக்க உலக வங்கியின் நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவித் திட்டம், வளரும் நாடுகளுக்காக உறுப்பு நாடுகள் உறுதி யளித்துள்ள யுஎஸ் டாலர் 160 பில்லியன் நிதியின் ஒரு பகுதி. வளரும் நாடுகள், தடுப்பூசிகளை பெருமளவில் விநியோகிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நிதி ஆதரவு வழங்கப்படும் என்று உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.