ஐரோப்பா முதல் சீனா வரையில் கிருமித்தொற்று அதி கரித்து வருவதால் மீண்டும் முடக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இரண்டாவது அலை கிருமிப்பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ஆங்காங்கே கிருமித்தொற்று தலைகாட்டுவதால் ஒரே நகரத்தைச் சேர்ந்த ஒன்பது மில்லியன் மக்களுக்கு சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தடுப்பூசி சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டால் கிருமித்தொற்றில் இருந்து தப்பிவிடலாம் என்று பெரிதும் காத்திருந்த நாடுகளுக்கு இந்தச் செய்தி பேரிடியாக தாக்கியுள்ளது.
அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனமான எலி லில்லி, நோய் எதிர்ப்பு சிகிச்சையில் 3வது கட்ட தடுப்பூசி சோதனைகளை இடைக்காலமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதற்கான காரணத்தை அது விளக்கவில்லை.
இதற்கு முன்பு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் இதே போன்ற பிரச்சினை காரணமாக தடுப்பூசி சோதனைகளை இடைக் காலமாக நிறுத்துவதாக தெரிவித் தது.
உலகம் முழுவதும் 37 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலையில் கிருமித்தொற்று அதிகரித்து வருகிறது.
முதல் கிருமிப்பரவலைத் தடுத்து நிறுத்திய நாடுகள் தற்போது இரண்டாவது அலைக்கு எதிராக போராடி வருகின்றன.
ஐரோப்பாவில் நெதர்லாந்தில் பகுதிநேர முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்கள், உணவகங்கள் செயல்பட அனுமதியில்லை. பதின்மூன்று வயதுக்கு ேமற்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தொழிலாளர் எதிர்க் கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மெர், கிருமிப்பரவலைத் தடுக்க இரண்டு முதல் 3 வாரங்களுக்கு முடக்க நிலையை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அறிவியல் அறிஞர்கள் ஆலோ சனைகளின்படி கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

