பிலிப்பீன்சில் சிறையில் அடைக்கப்பட்ட தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை இறந்துவிட்டதால் அதிகாரிகள் கண்டனத்துக்கு ஆளாகி யிருக்கின்றனர்.
சமூக ஆர்வலரான ரெய்னா மாயே நாசினோவையும் மற்றொரு சமூக சேவையாளரையும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி கடந்த ஆண்டு போலிசார் கைது செய்தனர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளார். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பிறந்த குழந்தையை அதிகாரிகள் பிரித்துவிட்டனர்.
இதையடுத்து இரண்டு மாதத்தில் குழந்தை இறந்துவிட்டது.
இதன் காரணமாக நாசி னோவை நடத்தப்படும் விதம் குறித்து கேள்வியெழுந்துள்ளது.

