இத்தாலியில் இரண்டாம் அலை தீவிரம்; இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தொற்று சம்பவங்கள் பதிவு

இத்தாலியில் இரண்டாம் அலை தீவிரம்; இதுவரை இல்லாத அளவுக்கு புதிய தொற்று சம்பவங்கள் பதிவு

1 mins read
f7a41d42-8a17-438e-a725-df433a4ee630
படம்: ராய்ட்டர்ஸ் -

இத்தாலியில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று (அக்டோபர் 14) புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று மட்டும் 7,332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று இத்தாலியில் உச்சத்தில் இருந்த காலத்தில், மார்ச் 21ஆம் தேதி 6,557 சம்பவங்கள் பதிவாகின. அதுவே ஒருநாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

நேற்று புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சாதனை அளவாக உயர்ந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் தினமும் சராசரியாக 15,752 தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்து 152,196 ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 இரண்டாம் அலை அண்டை நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவற்றைவிட இத்தாலியில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மைய நாட்களில் புதிய தொற்று எண்ணிக்கை அங்கு அதிகரித்துள்ளாது.

நேற்று முன்தினம் அங்கு தொற்றால் 43 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்