தாய்லாந்தில் தடையையும் மீறி நேற்று 2வது நாளாக அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
முன்னதாக பிரதமர் பிரயுத் சான்-ஒ-சா கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்
ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்ைலை. கொட்டும் மழையிலும் பெரும் திரளாகத் திரண்ட அவர்கள், 'சர்வாதிகாரம் ஒழியட்டும்' என்று முழக்கமிட்டனர்.
வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ரட்சபிரசோங் சந்திப்பில் ஆயிரக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டதால் குறுகிய நேரத்தில் 1.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆர்ப்பாட்டம் மாற்றப்பட்டது.
அருகில் இருந்த சாலைகளும் மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டன.
"ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ரட்சபிரசோங்கை போலிசார் மூடிவிட்டனர்," என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்.
"என்னுடைய எதிர்காலத்துக்கு நான் போராட வேண்டியுள்ளது," என்று பெயர் தெரிவிக்க விரும்பாத 22 வயது பல்கலைக் கழக மாணவர் ஒருவர் சொன்னார்.
மூன்று மாதமாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்ததால் நேற்று முன்தினம் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது.
மன்னரின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டும், பிரதமர் பிரயுத் பதவி விலக வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளாகும்.
தற்போதைய ராணுவ ஆட்சியின் கீழ் தயாரிக்கப்பட்ட சட்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பிரதமர் பிரயுத், பதவி விலகப் போவதில்லை என அறிவித்தார்.
"அரசாங்கம் அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மீறி நடந்துகொண்டால் சட்டத்தை கையில் எடுப்பது தவிர வேழியில்லை," என்று அவர் எச்சரித் தார்.
இதற்கிடையே ராணி சுத்திடாவின் வாகனங்கள் ஊர்வலமாகச் சென்றபோது அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட தாகக் கூறி இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
ராணிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

