அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் தேதிநடைபெறுகிறது.
இந்நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடனுக்கும் இடையே நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில் இருந்தவாறு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அண்மையில் அதிபர் டிரம்ப்புக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதால் வழக்கமான நேருக்கு நேர் விவாதம் இம்முறை நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது கொரோனாவை அதிபர் டிரம்ப் கையாண்ட விதத்தை திரு பைடன் கடுமையாக விமர்சித்தார்.
கொவிட்-19 கிருமியின் ஆபத்தை அமெரிக்கர்களிடமிருந்து அதிபர் டிரம்ப் மறைத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் முகக்கவசம் அணியாததால் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை அவர் சுட்டினார்.
இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், தாம் அதிபர் என்றும் மக்களைச் சந்திக்காமல் ஒளிந்துகொண்டிருக்க முடியாது என்றும் கூறினார்.

