மலேசியாவில் ஆறு பேர் மரணம்

மலேசியாவில் ஆறு பேர் மரணம்

1 mins read
bdc95000-6a22-482f-88aa-00bbe7ab8bfe
படம்: மலேசிய சுகாதார அமைச்சு -

மலே­சி­யா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 629 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம் மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­தோர் எண்­ணிக்கை 18,758ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, கிரு­மித்­தொற்று கார­ண­மாக நேற்று ஆறு பேர் உயி­ரி­ழந்­த­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இது­வரை கொரோனா கார­ண­மாக மலே­சி­யா­வில் 176 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

மலே­சி­யா­வில் கிரு­மித்­தொற்று பாதிப்பு மோச­ம­டைந்து வரு­வ­தால் கடந்த இரண்டு வாரங்­க­ளாக அந்­நாட்­டில் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு­வ­ருக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

தலை­ந­கர் கோலா­லம்­பூர், புத்ரா­ ஜெயா, சிலாங்­கூர் ஆகிய இடங்­களில் நிபந்­த­னை­யு­ட­னானநட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இது இம்­மா­தம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து 27ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் சாபா­வில் நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான பிர­சா­ரக்­கூட்­டங்­களில் மலே­சிய தீப­கற்­கம், சர­வாக் மாநி­லம் ஆகி­ய­வற்­றின் அர­சி­யல்­வா­தி­கள்

கலந்­து­கொண்­ட­போது அவர்­களில் சில­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­கான பிர­சா­ரக்­கூட்­டம் நடை­பெற்றபோது சாபா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது. சட்­ட­வி­ரோத குடி­யேறி­ க­ளுக்­கான முகா­மில் கிரு­மி

பர­வி­யதை அடுத்து, அம்­மா­நி­லத்­தில் நிலைமை மோச­ம­டைந்­தது.