ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க தாய்லாந்து பிரதமர் உத்தரவு

ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்க தாய்லாந்து பிரதமர் உத்தரவு

1 mins read
00742d60-17ba-4407-a6f1-0d7f562474e9
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­கள் நாளுக்கு நாள் வலுத்து வரு­கிறது. வெள்ளிக் ­கி­ழமை இரவு உச்­சக்­கட்­ட­மாக போலி­சா­ருக்­கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­ க­ளுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் தடுப்­பு ­களை உடைத்து முன்­னே­றி­ய­தால் அவர்­களை வரி­சை­யாக நின்ற போலி­சார் கவ­சங்­க­ளு­டன் தடுத்து நிறுத்­தி­னர்.

இரு தரப்­பி­லும் தள்­ளு­முள்ளு ஏற்­பட்டு போர்க்­க­ள­மாக மாறி­யது. போலி­சார் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்து கூட்­டத்தைக் கலைக்க முயற்சி செய்­த­னர். இந்த நிலையில் ஏழு பேரை போலிசார் கைது செய்து உள்ளனர்.

இதற்­கி­டையே பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் கோரிக்­கையை திரு பிர­யுத் சான்-ஒ-சா நிரா­க­ரித்து உள்­ளார்.

பேங்­காக்­கில் அடுத்த 30 நாட்­க­ளுக்கு அவ­ச­ர­நிலை பிர­க­ட­னப் படுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில் சட்­டத்தை மீறி நடப்­ப­வர்­களை இரும்­புக் கரம் கொண்டு ஒடுக்­கு­மாறு பிர­த­மர் பிர­யுத் உத்­த­ர­விட்­டு உள்­ளார்.

ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடப்போவதாக சூளுரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்