பிரான்சில் ஆசிரியர் தலை துண்டித்து கொலை

1 mins read
511ecda1-3a56-4d23-9c81-f3774c5b15e4
-

பாரிஸ்: பிரான்சின் பாரிஸ் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள ஒரு பள்­ளிக்கு அருகே வர­லாற்று ஆசி­ரி­யர் ஒரு­வர் தலை துண்­டித்­துக் கொல்­லப்­பட்­டார். நபி­கள் நாயகம் தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கேலிச்­சித்­தி­ரங்­களை மாண­வர்­க­ளுக்கு காட்­டி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த சந்­தேக நபர் ஆசிரி­ய­ரைக் கொன்­றுவிட்ட­தா­கக் கூறப்­ப­டு­கி­­றது.

இந்­தச் சம்­ப­வத்­தால் பாரிஸ் நகர மக்­கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இதை­யொரு பயங்­க­ர­வா­தச் செய­லாக வரு­ணித்தார்.

"அவர்­கள் வெற்றி பெற முடி­யாது. நாங்­களும் பதில் நட­வடிக்­கை­களை எடுப்­போம். மாண­வர்­க­ளுக்கு பேச்­சு­ரி­மை பற்றி கற்­றுக் கொடுத்­த­தால் ஆசி­ரி­யர் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம்," என்­று அவர் தெரிவித்தார்.

வெள்­ளிக்­கி­ழமை அன்று ஒரு பள்­ளிக்கு அருகே உள்­ளூர் நேரப்­படி மாலை ஐந்து மணி­ய­ள­வில் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.

"சந்தேக நபரை தேடிக் கண்டு பிடித்தோம். ஆனால் அவன் தப்பிக்க முயற்சி செய்ததால் துப்பாக்கியால் சுட்டோம். அதில் அவன் இறந்துவிட்டான்," என்று பாரிஸ் நகர போலிசார் கூறினர்.

சந்தேக நபர், 18 வயது செச்சென்யாவை பூர்வீகமாகக் கொண்டவன் என்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்பது பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.