தலை இழந்த ஆசிரியருக்கு அஞ்சலி, ஆதரவு

தலை இழந்த ஆசிரியருக்கு அஞ்சலி, ஆதரவு

1 mins read
c3f211e6-37bc-4572-8b88-3b9cf004d04e
-

முகம்மது நபியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரரிப் படங்களை தனது மாணவர்களுக்குக் காண்பித்ததற்காக தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவருக்காக பிரான்சின் பல்வேறு நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

வரலாறு ஆசிரியரான சாமுவெல் பட்டி இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களைக் கோபத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தைப் பதிப்பித்த சார்லி எப்டோ சம்பவத்தை இந்தத் தாக்குதல் நினைவுபடுத்துகிறது.