உலகளவில் ஒரே நாளில் 400,000 பேருக்கு கொவிட்-19 தொற்று

உல­க­ள­வில் புதி­தாக பதி­வான கொவிட்-19 நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் புதிய உச்­சத்தை எட்­டின. நேற்று முன்­தி­னம் ஒரே­நா­ளில் 400,000க்கும் அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

ஐரோப்­பா­வில் மீண்­டும் கொரோனா கிரு­மித்­தொற்று அலை எழுந்­தி­ருப்­பதே அதற்­குக் கார­ணம். முதல் கிரு­மித்­தொற்று அலையை வெற்­றி­க­ர­மாக கட்­டுப்­ப­டுத்­திய ஐரோப்பா, அண்­மைய வாரங்­க­ளாக கிருமி பர­வும் மையப் பகு­தி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

அங்கு கடந்த வாரம் நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 140,000க்கும் அதி­க­மான நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்­தன.

அமெ­ரிக்கா, இந்­தியா, பிரே­சில் ஆகிய நாடு­களில் அன்­றா­டம் பதி­வா­கும் நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளைக் கூட்­டி­னா­லும் ஐரோப்­பா­வில்­தான் அதை­விட அதி­க­மான சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

உல­கம் முழு­வ­தும் பதி­வா­கும் நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­களில் மூன்­றில் ஒரு பங்கு ஐரோப்­பா­வில்­பதி­வா­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

ஐரோப்­பா­வில் ஒவ்­வொரு ஒன்­பது நாட்­க­ளுக்­கும் ஒரு மில்­லி­யன் நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன. இது­வரை அங்கு மொத்­தம் 6.3 மில்­லி­யன் பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐரோப்­பா­வில் புதி­தாக பதி­வா­கும் தொற்­றுச் சம்­ப­வங்­களில் ஏறத்­தாழ பாதி­ய­ளவு பிரிட்­டன், பிரான்ஸ், ரஷ்யா, நெதர்­லாந்து, ஸ்பெ­யின் ஆகிய நாடு­களில் பதி­வா­கின.

கிரு­மிப் பர­வல் மோச­ம­டை­வதைத் தடுக்க சில ஐரோப்­பிய நாடு­களில் பள்­ளி­கள் மூடப்­ப­டு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு இணை­யம்­வழி கற்­றல் முறைக்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

வட அயர்­லாந்­தில் பள்­ளி­கள் இரு வாரங்­க­ளுக்­கும் உண­வ­கங்­கள் நான்கு வாரங்­க­ளுக்­கும் மூடப்­படு­கின்­றன.

ஸ்பெ­யி­னின் கேட்­ட­லோ­னியா பகு­தி­யில் 15 நாட்­க­ளுக்கு மது­பானக்­கூ­டங்­க­ளை­யும் உண­வ­கங்­களை­யும் மூட அதி­கா­ரி­கள் உத்த­ர­விட்­டுள்­ள­னர்.

ஒரே நேரத்­தில் கடை­க­ளுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்­கள் எண்­ணிக்­கை­யில் வரம்பு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்ள வேளை­யில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மருத்­துவ மாண­வர்­க­ளைப் பணி­ அமர்த்த செக் குடி­ய­ரசு திட்­ட­மிடு­கிறது. கொரோனா சிகிச்சை அளிப்­ப­தற்­காக இடம் ஒதுக்க, அவ­ச­ர­மில்­லாத மருத்­து­வச் சிகிச்சை முறை­களை மருத்­து­வ­மனை­கள் ஒத்திவைக்கின்றன.

போலந்­தில் நோய்த்­தொற்று நில­வ­ரம் பேரி­டர் நிலையை எட்­டும் அபா­யத்­தில் இருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

அந்­நாட்­டில் நோய்த்­தொற்று அதி­க­ரித்து வரும் வேளை­யில், ராணு­வத் தளங்­களில் தற்­கா­லி­க­மாக மருத்­து­வ­ம­னை­க­ளைக் கட்­டு­வது குறித்து அதி­கா­ரி­கள் பரி­சீ­லித்து வரு­கின்­ற­னர்.

உல­கி­லேயே கொவிட்-19 நோய்த்­தொற்­றால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் பகுதி லத்­தீன் அமெ­ரிக்கா.

உல­க­ள­வில் நோய்த்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் கால்­வாசிப் பேர் லத்­தீன் அமெ­ரிக்­கா­வில்­தான் உள்­ள­னர். அதற்கு அடுத்த நிலை­களில் ஆசியா, வடஅமெ­ரிக்கா, ஐரோப்பா வரு­கின்­றன.

பிரான்­சில் ஊர­டங்கு - பக்­கம் 6

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!