தோலில் ஒன்பது மணி நேரம் உயிர்ப்போடு இருக்கும் கிருமி

1 mins read
45882daf-8fd1-44ae-9cb9-48f26e92ef53
நோயாளியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட செல்லைச் சுற்றியுள்ள கொரோனா வைரஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

மனி­தத் தோலில் கொவிட்-19 கிருமி உயிர்ப்­பு­டன் இருக்­கும் என்று ஜப்­பா­னிய ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

மனி­தத் தோலில் சளிக்­காய்ச்­சல் கிருமி 1.8 மணி நேரம் செயல்­தி­ற­னு­டன் இருக்­கும். இந்­நி­லை­யில், அதைப் போல ஐந்து மடங்கு நேரத்­திற்கு கொரோனா கிருமி நோயைப் பரப்­பும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கொரோனா தொற்­றைத் தடுக்க அடிக்­கடி கைக­ளைக் கழுவ வேண்­டிய அவ­சி­யத்தை இது காட்­டு­கிறது என்று ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இறந்து ஒரு நாளான மனித உட­லில் இருந்து எடுக்­கப்­பட்ட தோலை அந்த ஆய்­வுக்­குழு சோத­னைக்கு எடுத்­துக்­கொண்­டது.

எத்­த­னா­லைத் தட­விய 15 நொடி­க­ளில் கொரோனா கிரு­மி­யும் சளிக்­காய்ச்­சல் கிரு­மி­யும் நோயை ஏற்­ப­டுத்­தும் திறனை இழந்­து­வி­டும். அந்த வேதிப்­பொருள்­தான் கைச்­சுத்­தி­க­ரிப்­பான்­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

"கொரோனா கிருமி அதிக நேரம் உயிர்ப்­பு­டன் இருப்­பது, தொடு­வ­தன் மூலம் நோய் பர­வும் அபா­யத்தை அதி­கப்­ப­டுத்­து­கிறது. ஆயி­னும், கைக­ளைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தன் மூலம் அந்த அபா­யத்­தைக் குறைக்­க­லாம்," என்று அந்த ஆய்வு கூறு­கிறது.