மலேசியா: புதிய உச்சமாக 871 பேருக்குத் தொற்று

மலேசியா: புதிய உச்சமாக 871 பேருக்குத் தொற்று

1 mins read
8d6f5a0d-e4ab-461b-8113-8fab59f18e7f
படம்: ராய்ட்டர்ஸ் -

இதற்­கு­முன் இல்லாத வகை­யில் மலே­சி­யா­வில் நேற்று ஒரே நாளில் 871 பேருக்கு கொவிட்-19 உறு­தி­செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு 20,498ஆக உயர்ந்­தது.

மேலும் எழு­வர் உயி­ரி­ழக்க, கொரோனா தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 187ஆக அதி­க­ரித்­தது.

சாபா­வி­லும் தலை­ந­கர் கோலா­லம்­பூர் அமைந்­துள்ள சிலாங்­கூர் மாநி­லத்­தி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தால் அங்கு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, கிள்­ளான் பள்ளத்­தாக்­கில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டவர்களில் பத்­தில் ஒன்பது பேர் அப்­ப­கு­தி­யில் உள்ள கடைத்­தொ­கு­தி­க­ளுக்­கும் உண­வகங்­க­ளுக்­கும் சென்று வந்­த­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­து இருக்கிறது.