உலக அளவில் கிருமித்தொற்று 40 மில்லியனைக் கடந்தது

உலக அளவில் கிருமித்தொற்று 40 மில்லியனைக் கடந்தது

1 mins read
728902b6-74b4-48ac-85b4-ee5f3b95c6c0
படம்: மலேசிய சுகாதார அமைச்சு -

உலக அள­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை 40 மில்­லி­ய­னைத் தாண்­டி­யுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் கணக்­கெடுப்பு காட்­டு­கிறது.

நாடு­க­ளின் அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பதி­வு­செய்­யும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த எண்­ணிக்கை கணக்­கி­டப்­ப­டு­கிறது. ஆனால் உண்­மை­யில், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை இன்­னும் அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­கம் உள்ள சில நாடு­களில் பரி­சோ­தனை விகி­தம் குறை­வாக இருப்­ப­தும் பொரு­ளி­ய­லைக் கருதி, தொற்று எண்­ணிக்­கை­யைச் சில நாடு­கள் குறைத்து காட்­டு­வ­தும் இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்.

அதி­கா­ர­பூர்­வத் தக­வல்­க­ளின்­படி, கிருமி வேக­மா­கப் பர­வு­கிறது. வெறும் 32 நாட்­களில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் 30 மில்­லி­ய­னில் இருந்து 40 மில்­லி­ய­னுக்கு உயர்ந்­துள்­ளன.

ஒப்­பு­நோக்க, கிரு­மித்­தொற்றுச் சம்­ப­வங்­கள் 20 மில்­லி­ய­னில் இருந்து 30 மில்­லி­யனை எட்ட 38 நாட்­கள் ஆகின.

தொற்­றுச் சம்­ப­வங்­கள் 10 மில்­லி­ய­னில் இருந்து 20 மில்­லி­ய­னைத் தொட 44 நாட்­கள் எடுத்­தன. தொற்று 10 மில்­லி­யனை எட்ட மூன்று மாதங்­கள் ஆகின.

அமெ­ரிக்கா, இந்­தியா, பிரே­சி­ல் ஆகிய நாடு­கள் உல­கில் கிரு­மித்­தொற்­றால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.