தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியருக்காக மாபெரும் பேரணிகள்

பாரிஸ்: பிரான்­சில் இளை­யர் ஒரு­வ­ரால் தலை துண்­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் ஆசி­ரி­ய­ருக்கு அஞ்­சலி செலுத்­தும் வித­மாக பல்­லா­யி­ரக்­கணக்­கா­னோர் பேர­ணி­களை நடத்­தி­யுள்­ள­னர்.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஆத­ர­வாக பாரிஸ் உட்­பட நாட்­டின் பல நக­ரங்­க­ளி­லும் திரண்ட பிரெஞ்சு மக்­கள், இறந்­த­வ­ருக்கு மௌன அஞ்­சலி செலுத்­தி­னர்.

முகக்­க­வ­சம் அணிந்து பேர­ணி­யில் ஈடு­பட்­ட­வர்­களில் பலர் நாட்­டின் சுதந்­தி­ரம், சமத்­து­வம், ஒற்­று­மை­யைத் தற்­காப்­ப­தா­கக் கூறி­னர்.

அண்­மை­யில் பிரான்சை உலுக்­கிய இந்த கொலைச் சம்­ப­வத்­தைக் கண்­டித்து நடத்­தப்­பட்ட மாபெ­ரும் பேர­ணி­யில் பிரெஞ்­சுப் பிர­த­மர் ஜீன் ஹஸ்­டெக்ஸ், கல்வி அமைச்­சர் உள்­ளிட்ட முக்­கிய அர­சி­யல் தலை­வர்­கள் பங்­கேற்று தங்­க­ளது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­னர்.

வர­லாற்று, புவி­யி­யல் ஆசி­ரி­யர் சாமு­வேல் பெட்டி என்­ப­வர், பேச்சு சுதந்­தி­ரம் பற்­றிய வகுப்பு ஒன்­றில் மாண­வர்­க­ளி­டம் நபி­கள் நாய­கத்­தின் கேலிச்­சித்­தி­ரத்தைக் காட்­டி­ய­தைத் தொடர்ந்து முஸ்­லிம் மாண­வர்­க­ளின் பெற்­றோர் சிலர் கோப­ம­டைந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து 18 வயது இளை­யர் ஒரு­வர், பள்­ளிக்கு அரு­கில் அந்த 47 வயது ஆசி­ரி­ய­ரின் தலை­யைக் கத்­தி­யால் வெட்­டி­னார்.

ரஷ்­யத் தலை­ந­கர் மாஸ்­கோ­வில் பிறந்த, செச்­னி­யைப் பூர்­வீகமாகக் கொண்ட அந்த இளை­யர், சம்­ப­வத்­திற்­குப் பின்­னர் காவல்­துறை அதி­கா­ரி­க­ளால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இந்­தக் கொலைச் சம்­ப­வத்­தின் தொடர்­பில் 11 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வத்­திற்கு முன், ஆசி­ரி­யர் பெட்­டிக்கு எதி­ராக சமூக ஊட­கங்­களில் மிரட்­டல்­கள் எழுந்து இருந்­தன.

ஆசி­ரி­யர்­களை மிரட்­டல்­களில் இருந்து பாது­காப்­ப­தற்­கான உத்­தியை பிரெஞ்சு அரா­சங்­கம் ஆராய்ந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், வெளி­நாட்­ட­வர் சுமார் 231 பேரை நாட்­டை­விட்டு வெளி­யேற்ற பிரெஞ்சு அரா­சங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது. தீவி­ர­வாத சமய நம்­பிக்கை கொண்­ட­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­படும் அவர்­கள், பிரெஞ்சு அர­சாங்­கத்­தின் கண்­கா­ணிப்பு வளை­யத்­தில் இருப்­ப­வர்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon