சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் பிரசாரம்

 அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லுக்கு இன்­னும் இரண்டு வாரங்­கள் எஞ்­சி­யுள்ள நிலை­யில், 55 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் மதிப்­பி­லான தேர்­தல் விளம்­ப­ரத்தை அதி­பர் டோனல்ட் டிரம்ப் அறி­வித்­துள்­ளார்.

இதற்­கான நிதியை குடி­ய­ர­சுக்­கட்­சி­யின் தேசி­யக் குழு வழங்­கு­கிறது.

அரி­சோனா, ஐயோவா, ஒஹாயோ, மிச்­சி­கன், நார்த் கரோ­லைனா, ஃபுளோரிடா, பென்ஸ்­சில்­வே­னியா, ஜியோர்­ஜியா, நிவேடா, விஸ்­கொன்­சின் ஆகிய மாநி­லங்­களில் நடை­பெற இருக்­கும் தேர்­தல் பிர­சா­ரங்­க­ளுக்கு இந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும்.

தமது தேர்­தல் பிர­சார அணி­யி­ன­ரு­டன் நேற்று முன்­தி­னம் காலை நடை­பெற்ற காணொளி வாயி­லான கூட்­டத்­தில் தம்மை எதிர்த்­துப் போட்­டி­யி­டும் ஜோ பைடனை அதி­பர் டிரம்ப் சாடி­னார்.

ஜோ பைட­னின் மக­னான ஹன்­டர் பைட­னின் வர்த்­தக அணுகுமு­றை­கள் நேர்­மை­யற்­றவை என்­றார் அவர். அது­மட்­டு­மல்­லாது, அமெ­ரிக்­கா­வின் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலை­யத்­தின் இயக்கு­ ந­ரான டாக்­டர் ஆண்­டனி ஃபௌசியை­யும் அவர் கடு­மை­யாக விமர்­சித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்று பற்றி மீண்­டும் மீண்­டும் வெளி­வ­ரும் செய்­தி­க­ளைக் கேட்டு அமெ­ரிக்­கர்­க­ளுக்கு சலிப்பு ஏற்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.

தமக்கு எதி­ரா­கக் கருத்­து­களை வெளி­யிட்ட அமெ­ரிக்க நாளி­தழ்க­ளைச் சாடிய அதி­பர் டிரம்ப், தேர்த­லில் வெற்றி பெறு­வ­தில் அதிக நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தாக காணொளி வாயி­லாக நடை­பெற்ற கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட செய்­தியா­ளர்­க­ளி­டம் அவர் கூறி­னார். நேற்று முன்­தி­னம் அரி­சோ­னா­வில் நடை­பெற்ற பிர­சா­ரக் கூட்­டத்­தின்­போது திரு பைடன் முன்­னி­லை­யில் இருப்­ப­தாக கருத்­துக் கணிப்பு காட்­டி­யது.

இதை­ய­டுத்து, திரு பைடனை குற்­ற­வாளி என அதி­பர் டிரம்ப் வர்­ணித்­தார். திரு பைட­னின் மக­னு­டைய நேர்­மை­யற்ற வர்த்­தக அணு­கு­முறை பற்றி செய்தி வெளி­யி­டா­த­தற்­கும் அமெ­ரிக்க நாளி­த­ழான தி நியூ­யார்க் போஸ்ட்­டைச் சேர்ந்த செய்தியாளரை அவர் கடு­மை­யாக விமர்­சித்­தார்.

இதற்­கி­டையே, அதி­பர் டிரம்ப்­புக்­கும் திரு பைட­னுக்­கும் இடையே நாளை நடை­பெற இருக்­கும் இறுதி தேர்­தல் விவா­தத்­தில் புதிய அம்­சம் ஒன்று சேர்க்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முதல் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஒரு­வர் மற்­றொ­ரு­வரைப் பேச­வி­டா­மல் அடிக்­கடி குறுக்­கிட்­ட­தால் இம்­முறை அவ்­வாறு நடந்­தால் குறுக்­கி­டும் வேட்­பா­ள­ரின் மைக்­ரோ­ஃபோன் முடக்­கப்­படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon