சுபாட்டானாபோங்: ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு தேவை

பேங்­காக்: தாய்­லாந்­தில் கடந்த சில நாட்­க­ளாக அர­சாங்­கத்தை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­ற­ன.

பிர­த­மர் பிரா­யுட் சான் ஓ சா பதவி விலக வேண்­டும் என்றும் மன்­ன­ரின் அதி­கா­ரம் குறித்து சீர்­தி­ருத்­தங்­க­ளைக் கொண்டு வர வேண்­டும் என்றும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இந்த ஆர்ப்­பாட்டங்­களை அர­சி­யல் பிரச்­சினை என்று தாய்­லாந்து துணைப் பிர­த­மர் சுபாட்­டா­னா­போங் புன்­மீ­சாவ் தெரி­வித்­துள்­ளார். எனவே இப்­பி­ரச்­சி­னைக்கு அர­சி­யல் ரீதி­யா­கத்­தான் தீர்வு காண வேண்­டும் என்று அவர் நேற்று கூறி­னார்.

தாய்­லாந்து சீனர்­கள் வர்த்­த­கச் சபை, அத­னு­டன் தொடர்­பு­டைய வர்த்­த­கச் சங்­கங்­கள் ஆகி­ய­வற்­று­ட­னான வரு­டாந்­திர கூட்­டத்­தில் உரை­யாற்­றிய திரு சுபாட்­டா­னா­போங் இதைத் தெரி­வித்­தார்.

தற்­போது தாய்­லாந்து எதிர்­நோக்­கும் பிரச்­சி­னையை ஒரு முடி­வுக்­குக் கொண்டு வர அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்றும் நாட்டைப் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யி­லி­ருந்து மீட்க வேண்­டும் என்­றும் அவர் அழைப்பு விடுத்­தார். தாய்­லாந்தைத் தற்­போது உலுக்கி வரும் ஆர்ப்­பாட்­டங்­கள் குறு­கிய கால­கட்­டத்­துக்கு மட்­டுமே நீடிக்­கும் என்று தாம் நம்­பு­வ­தாக அவர் கூறி­னார். இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளும் அதி­கா­ரி­கள் பொறு­மை­யு­டன் இருக்க வேண்­டும் என்­றார் அவர்.

தாய்­லாந்­தின் பொரு­ளி­யலை மீண்­டும் உயிர்ப்­பிக்க கடை­க­ளுக்­குச் சென்று பொருட்­களை வாங்கு­ வ­தில் மக்­கள் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார். அர­சாங்­கம் அதன் பங்­கிற்கு ஒரு டிரில்­லி­யன் பாட்டை ($43.5 பில்­லி­யன்) வழங்­கி­யுள்­ள­தாக அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon