அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனையைத் தொடரும் ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம்

அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனையைத் தொடரும் ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம்

1 mins read
9efdc158-6417-4042-b543-f0fdcc29f9ac
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி நிறுவனம் தனது கொவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்காவில் அடுத்த வாரம் மீண்டும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஒருவருக்கு ஏற்பட்ட கடும் உடல்நலக் குறைவு தொடர்பான மறு ஆய்வை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிறைவு செய்துள்ளதையடுத்து, பரிசோதனை தொடர இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

அந்த நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் இறுதிக் கட்ட பரிசோதனையின்போது இங்கிலாந்தில் அதனைப் பயன்படுத்திய ஒருவருக்கு அரிய வகை தண்டுவட வீக்க நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கு மேல் அந்தப் பரிசோதனையில் பங்கேற்பவர்களிடம் இந்தப் பாதிப்பு குறித்து தெரிவித்து அவர்களின் கையொப்பமிட்ட சம்மதம் பெறப்படும் என்று அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பரிசோதனையைத் தொடர அந்நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்