சீனாவுடன் நெருக்கம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுட­னான நெருக்கத்தைக் குறைத்­துக்­கொள்­ளும்­படி இலங்­கையை அமெ­ரிக்கா மறை­மு­க­மாக எச்சரித்துள்ளது.

அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ அடுத்த வாரம் இந்­தியா, இலங்கை, மாலத்­தீவு, இந்­தோ­னீ­சியா ஆகிய ஆசிய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

சீனா­விற்கு எதி­ராக ஆத­ரவு திரட்­டு­வதே அவ­ரது இந்­தப் பய­ணத்­தின் முக்­கிய நோக்­க­மாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், சீனாவை நேர­டி­யா­கக் குறிப்­பி­டா­மல், பொரு­ளி­யல் ஒத்துழைப்பிற்காக எந்­நாட்­டு­டன் கைகோக்­கி­றோம் என்­ப­தில் கவனம் தேவை என்று அமெ­ரிக்கா இலங்­கையை எச்­ச­ரித்துள்ளது.

“பார­பட்­சமான, வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற நடை­மு­றை­க­ளைப் போல அன்றி வெளிப்­ப­டை­யான, நிலைத்தன்மைமிக்க பொரு­ளி­யல் வளர்ச்­சித் தெரி­வு­களை நாங்­கள் முன்­வைக்­கி­றோம். அதனை மறு­ஆய்வு செய்­யும்­படி இலங்­கையை நாங்­கள் ஊக்­கு­விக்­கி­றோம்,” என்று அமெ­ரிக்க வெளியுறவு அமைச்சு அதிகாரி டீன் தாம்­சன் தெரி­வித்து உள்ளார்.

“தனது நீண்­ட­கால வளப்­பத்திற்­கான பொரு­ளி­யல் சுதந்­தி­ரத்­தை அடைந்திட கடி­ன­மான, ஆனால் தேவை­யான முடி­வு­களை எடுக்­கும்­படி இலங்­கையை வலி­யு­றுத்­து­கிறோம்,” என்­றார் திரு தாம்­சன்.

இத­னி­டையே, அவ­ரது இந்­தக் கருத்­து­கள் ‘பனிப்­போர் மன­நிலை’ யைக் காட்­டு­வ­தாக உள்­ளது என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஸாவ் லிஜி­யன் குறிப்­பிட்டார்.

கட்­டா­யப்­ப­டுத்­து­வதன் மூலம் நாடு­க­ளுக்கு இடை­யி­லான இயல்­பான ஒத்­து­ழைப்­பிற்கு இடை­யூறு விளை­விக்­கும் முயற்சி வெற்­றி­பெறாது என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!