சீனாவிலிருந்து கொரோனா தூசு; வடகொரியா எச்சரிக்கை

சீனாவிலிருந்து கொரோனா தூசு; வடகொரியா எச்சரிக்கை

1 mins read

சீனாவிலிருந்து வீசும் 'மஞ்சள்' தூசில் கொவிட்-19 கிருமி இருக்கலாம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி தன் மக்களை வடகொரியா எச்சரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் தலைநகர் பியோங்யாங்கில் தெருக்கள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. தன் நாட்டில் கொரோனா தொற்று அறவே இல்லை என வடகொரியா கூறி வருகிறது. ஆயினும், கடந்த ஜனவரி முதலே எல்லைகளை மூடியும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தும் அந்நாடு அதிக விழிப்புடன் இருந்து வருகிறது.