மலேசியா: கொரோனாவால் பத்துப் பேர் மரணம்

மலேசியா: கொரோனாவால் பத்துப் பேர் மரணம்

1 mins read
3a348d42-596a-4197-91ae-5ecc0ec143f0
படம்: மலேசிய சுகாதார அமைச்சு -

மலே­சி­யா­வில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் கொவிட்-19 தொற்­றால் ஒரே நாளில் பத்­துப் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, அங்கு கிரு­மித் தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 214ஆக அதி­க­ரித்­தது.

நேற்று முன்­தி­னம் 800க்கு மேற்­பட்­டோரை கொரோனா தொற்­றிய நிலை­யில், நேற்று அந்த எண்­ணிக்கை 710ஆகப் பதி­வா­னது.

ஆக அதி­க­மாக சாபா மாநி­லத்­தில் 528 பேர் கிரு­மித்­தொற்­றால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர். சிலாங்கூர் (62), பினாங்கு (39), நெகிரி செம்பிலான் (37), லபுவான் (19) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களைப் பிடித்தன.

மலேசியாவில் இதுவரை 24,514 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில் அவர்களில் 15,884 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். இப்போது 90 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.