மேலும் ஓங்கியது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அதிகார பலம்

மேலும் ஓங்கியது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அதிகார பலம்

1 mins read
50b12af8-e1f3-4fa1-b27a-e4bfe79aa28b
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையிலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார்.  படம்: ஏஎஃப்பி -

இரண்டு நாள் கடும் விவாதத்தில் எதிர்க்கட்சியினரால் அரசியலமைப்பின் 'சர்வாதிகாரி' என்று குற்றம்சாட்டப்பட்டார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே.

பின் '20ஏ' அரசியலமைப்பு திருத்தத்தின் வாக்கெடுப்பில் உயர் அதிகாரிகளை நியமிக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் கணிசமான அதிகாரத்தைப் பெற்றுவிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபருக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் ஓர் உறுப்பினர் திருத்தச் சட்டத்துக்குத் தேவையான பெரும்பான்மையைக் கொடுக்காதபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எண்மர் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், பிரதமரான தம் சகோதரர் மகிந்த ராஜபக்சே உட்பட எந்த அமைச்சரையும் அதிபர் இனி பணிநீக்கம் செய்ய முடியும்.

அத்துடன் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் இரண்டரை ஆண்டு முடிந்த நிலையிலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பெற்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், "இந்த மசோதாவால் சர்வாதிகாரி ஆட்சி மட்டும் இருக்காது, ஒரு சர்வாதிகாரி உருவாகியிருப்பார்," என்றார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை அதிபரான இவர், உடனே முன்னாள் அதிபரும் தம் சகோதரருமான மகிந்த ராஜபக்சேயை பிரதமராக்கினார்.